டிஜிட்டலில் களமிரங்கும் ‘என்னங்க சார் உங்க சட்டம்’...

22 அக்டோபர் 2021, 04:48 PM

பிரபு ஜெயராம் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகும் படம்  “என்னங்க சார் உங்க சட்டம்”. தயாரிப்பாளர்கள் இப்படத்தினை தமிழில் ஒரு புதிய  “Duplex” வகை படம் என்று கூறியுள்ளனர். 

அப்படியென்றால் இந்த படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்தது, இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை தீவிரமாக சொல்வதாக இருக்கும். இப்படத்தின் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், படத்தின் முதல் பகுதியில் 12 சிறந்த நடிகர்கள் நடித்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் படத்தின் இரண்டாம் பகுதியில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் ரோகினி, R.S.கார்த்திக், ஜூனியர் பாலையா, மெட்ராஸ் மீட்டர் கோபால் மற்றும் நக்கலைட்ஸ் தனம் நடித்துள்ளனர். இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள், ட்ரைலர் வெளியாகியுள்ளது, போஸ்டர்கள் மூலமே படத்தின் கதை கருவை ரசிகர்கள் இயக்குனர் கூறிவிட்டார், இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. விஇந்நிலையில், இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 29ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.