யூட்யூப் ட்ரெண்டிங்கில் கலக்கும் ‘செல்லம்மா’ பாடல் வீடியோ...

22 அக்டோபர் 2021, 12:37 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகிருக்கும் படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கும் இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ரெகுலர் கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல் டாக்டர் திரைப்படம் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

https://t.co/jZqUN5jC9l

 கொரோனா இரண்டாம் அலைக்கு பின் வெளியான படங்களிலே டாக்டர் அதிக வசூல் பார்த்த படமாக அமைந்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்ட ‘செல்லம்மா’ பாடல் லிரிக்கள் வீடியோவாக கடந்த ஆண்டு வெளியாகி தற்போது 130 மில்லியன் பார்பைகளை கடந்துள்ளது, இந்தநிலையில் செல்லம்மா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அழகான செட், நேர்த்தியான நடன அமைப்பு என ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது யூட்யூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வைரலாகி வருகிறது.