பிரபாஸின் 25வது படத்தில் அவருக்கு ஜோடியாகும் பாலிவுட் பிரபலம்...

13 அக்டோபர் 2021, 08:29 PM

இந்திய அளவில் உருவாகும் பெரிய பட்ஜெட் படங்களில் தவிர்க முடியாத நடிகராக இருந்து வருகிறார் பிரபாஸ்.  தற்போது இவர் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. தனது 23வது படத்திற்கான மீண்டும் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் இணையும் இவர் 24வது படத்திற்காக நாக் அஷ்வின் ரெட்டியுடன் இணைய உள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் பிரபாஸின் 25வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப்போது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகை கரீனா கபூர் பிரபாஸுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.