‘புஷ்பா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது...

13 அக்டோபர் 2021, 08:28 PM

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் ‘புஷ்பா’. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த படத்திஅ இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகிவருகிறது. ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வைத்திருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸை வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றி அறிவித்தனர். இதனிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஸ்ரீவள்ளி’ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுனின் மாறுபட்ட லுக் இந்த படத்தின்  மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.