ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...

11 அக்டோபர் 2021, 10:05 PM

கடந்த 2016ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பெல்லு சூப்பலு’. தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிருந்த இந்த படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘ஓ மணப்பெண்ணே’. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி உள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.