வலிமை தரமான சம்பவங்கள் நிறைந்த படம்..! அடித்து சத்தியம் செய்யும் வில்லன் நடிகர்...

22 செப்டம்பர் 2021, 07:54 PM

தெலுங்கில் வெளியான ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் கார்த்திகேயா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் வளர்ந்து வரும் வேலையில் யாரும் எதிர்ப்பாராத விதமாக அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வில்லனாக ஒப்பந்தமானார்.

 எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் மீது இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் போஸ்டர் மற்றும் சிங்கிள் வைரலானதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலிமை படத்தின் வில்லன் கார்த்திக்கேயாவுக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லி படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், வில்லன் கார்த்திக்கேயா இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலானது.  அதனைத்தொடர்ந்து, அஜித்தும், கார்த்திகேயாவும் இருப்பது போன்ற டிசைன் போட்டோக்களை ரசிகர்கள் வெளியிட்டனர். அந்த சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் கார்த்திக்கேயா டிவீட் செய்துள்ளார். அதில் இந்த வலிமை திரைப்படம் சத்தியமாக தல அஜித்குமார் சார் அவர்களின் திரைவாழ்வில் என்றும் நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.