தல vs தளபதி பொங்கலுக்கு தெறிக்கப் போகும் திரையரங்குகள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்...

22 செப்டம்பர் 2021, 07:53 PM

அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாரகிக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்‌ஷன் படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

 விரைவில் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்க படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

 அதன்படி ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் வலிமை படம் 2022 பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. முன்னதாக ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் தற்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தோடு வெளியாக உள்ளது. ஏற்கனவே தல, தளபதி என அடித்துக்கொள்ளும் ரசிகர் இந்த செய்தி வெளியானதில் இருந்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜித் மற்றும் விஜய் படங்கள் 5 முறை ஒரே தேதியில் வெளியாகியுள்ளது அதில் 3 முறை பொங்கல் ரிலீஸில் இவர்களின் படங்கள் சந்தித்துள்ளது. தற்போது மீண்டும் இவர்களின் படங்கள் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாவதால் கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் மிகப்பெரிய அளவில் வசூலை பார்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.