ராணா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் நெட்ஃபிளிக்ஸ் வழங்கும் புதிய வெப் சீரிஸ் ‘ராணா நாயுடு’...

22 செப்டம்பர் 2021, 12:15 PM

டோலிவுட்டை சேர்ந்து இரண்டு முக்கிய பிரபலங்களான ராணா டகுபதியும் அவரின் மாமாவும் முன்னணி நடிகருமான வெங்கடேஷ் டகுபதியும் முதல் முறையாக திரையில் ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த தொடருக்கு ‘ராணா நாயுடு’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பிரபலமான ஷோடைம் கிரைம் தொடரான ‘Ray Donovan' தொடரின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகவுள்ளது. இந்த தொடரை கரண் அன்ஷுமான் இயக்கவுள்ளார். இந்த தொடர் பாலிவுட் பணக்கார உலகில், எந்த பிரச்சனையையும் சரி செய்யும், பிக்ஸராக இருக்கும் ராணா நாயுடுவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது. இத்தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையை Viacom CBS Global Distribution Group பெற்றுள்ளது. இவர்களுடன் சேர்ந்து Locomotive Global media LLp இந்த தொடரை தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த தொடருக்கான  படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.