சூரி வீட்டு கல்லாயாணத்தில் காணாமல் போன தங்க நகைகள்...

14 செப்டம்பர் 2021, 04:06 PM

கோலிவுட்டில் சில ட்ரேட் மார்க் காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ எனும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா துறையில் நல்ல நண்பர்கள் வட்டத்தை கொண்டுள்ள இவரின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு திரைப்பிரபலங்கள் சிலர் கலந்துக் கொள்வது வழக்கம்.

 சமீபத்தில் இவரது அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

சூரி முன் நின்று நடத்திய திருமணத்திற்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில், அந்த திருமணத்தில் 10 சவரன் மதிப்பிலான நகை கொள்ளை போனதாக கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.