‘ஆர்டிகள் 15’ தமிழ் ரீமேக்கில் இணையும் திபு நினன் தாமஸ்...

14 செப்டம்பர் 2021, 04:05 PM

கோலிவுட்டில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகரான உதயநிதி தற்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தமிழக அரசியல் களத்திலும் வெற்றிக் கண்டு எம்.எல்.ஏ-வாக இருந்து வரும் இவர் கிடைக்கும் நேரங்களில் படங்களில் நடிப்பதையும் சீராக செய்து வருகிறார்.

 ‘ஆர்டிகள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

இதனிடையே உதயநிதியின் ‘ஆர்டிகள் 15’ தமிழ் ரீமேக்கை இயக்கிவரும் அருண்ராஜா காமராஜா படத்திற்கு இசையமைக்க திபு நினன் தாமஸை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் மரகதநாணயம் மற்றும் கனா ஆகி படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தியில் இஷா தல்வார் நடித்த கதாநாயகனின் மனைவி கேரக்டரில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.