ஆக்‌ஷன் அதிரடிகளோடு தேசப்பற்றை விதைக்கும் அருண் விஜய்யின் ‘பார்டர்’...

13 செப்டம்பர் 2021, 12:34 PM

சினிமா துறையில் எப்போதுமே ஒரு படம் ஹிட் கொடுத்த காம்போ மீண்டும் இணைந்தாலே அந்த படத்தின் மீதான கவணம் சற்று அதிகமாகவே இருக்கும். 

அப்படியான ஒரு எதிர்ப்பார்ப்பு அருண் விஜய்யின் அடுத்த படமான ‘பார்டர்’ படத்துக்கும் கிடைத்துள்ளது.  குற்றம் 23 படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் டைரக்டர் அறிவழகன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தான் ‘பார்டர்’. இந்த படத்தை 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரித்து வருகிறார். 

ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியா ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகி ரெஜினா கசண்ட்ரா ஆச்சர்யமூட்டும் வகையில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார், இந்தச் படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூட்யூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த ட்ரைலர் கோலிவுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.