அடுத்தடுத்து தனுஷை ஈர்க்கும் தெலுங்கு இயக்குனர்கள்...

13 செப்டம்பர் 2021, 12:33 PM

தமிழில் பிஸியான நடிகராக இருந்து வரும் தனுஷ் அடுத்து தெலுங்கு சினிமா துறையிலும் அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என ஒரு கைப் பார்த்துவிட்ட தனுஷ் தற்போது டோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்க திட்டமிட்டுள்ளார். 

தெலுங்கில் முதல் படமாக சேகர் கம்முலா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் டிசம்பரில் துவங்கவிருக்கிறது. இது வரை  தனுஷ் நடித்த படங்களிலே பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவரை தொடர்ந்து டோலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தனுஷை ஹைதராபாத்தில் சந்தித்து ஒரு படத்திற்கு கால்ஷீட் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது. 

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை உருவாக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் பரவலாக பேசப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷிடம் மேலும் ஒரு தெலுங்கு இயக்குனர் கதை சொல்லி உள்ளாராம். தெலுங்கில் ஆர்எக்ஸ் 100, மகா சமுத்திரம் படங்களை இயக்கிய மகேஷ் பூபதி சொன்ன கதை தனுஷுக்கு பிடித்துவிட்டதாம். இதனால் அந்த கதையில் நடிப்பதற்கும் அவர் சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.