மலையாள சூப்பர் ஹிட் படத்தை தமிழுக்கு கொண்டுவரும் கௌதம் மேனன்...

04 ஆகஸ்ட் 2021, 11:49 AM

கோலிவுட்டில் கௌதம் மேனன் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. வாழ்கையை புதுவித கோணத்திலும் காதலை மற்ற படங்களில் இருந்து மாறுதலாகவும் சொல்லும் திறன் கொண்ட கௌதமின் படங்களை பார்த்து காதல் செய்த இளைஞர்கள் இங்கு ஏராளம். தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்ட இவர் தற்போது பிஸியான நடிகராகவும் கோலிவுட்டை கலக்கி வருகிறார். 

இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘நாயட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாகக் ஒரு தகவல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மலையாளத்தில் மார்ட்டின் பிரக்டின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘நாயட்டு’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

 தற்செயலாக ஒரு குற்றத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடும் 3 போலீஸ்காரர்களின் போராட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. திரையரங்கில் வெளியான அப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே கேரளாவில் கொரோனா தொற்று அதிகமானதால் தியேட்டர்கள் மூடப்பட்டது. அதையடுத்து அந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமைகளுக்கு அதிக போட்டி வந்தது. தற்போது நாயட்டு படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.