ஆலம்பனா படத்தில் இருந்து வெளியான ‘எப்ப பார்தாலும்’ பாடல்...

31 ஜூலை 2021, 05:05 PM

‘மலேசியா டு அம்னீஷியா’ படத்தை தொடர்ந்து வைபவ் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு ‘காட்டேரி’, ‘ஆலம்பனா’, ‘ஆர்.கே.நகர்’, ‘பஃப்ஃபூன்’ ஆகிய படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் புதுமுக இயக்குனர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஃபேண்டஸி ட்ராமா தான் ‘ஆலம்பனா’. 

https://youtu.be/72hveifkGSM

இதில் வைபவ் ஜோடியாக மலையாள நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.  இந்த நிலையில் ஆதியின் இசையில் உருவாகிருக்கும் ‘எப்ப பார்தாலும்’ எனும் முதல் சிங்கிளை வெளியிட்டுள்ளது படக்குழு. நீண்ட நாட்களுக்கு பிறகு அர்மான் மாலிக் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.