சென்னையில் வேலையை துவங்கவிருக்கும் ‘விஷால் 31’ படக்குழு...

31 ஜூலை 2021, 05:04 PM

நடிகர் விஷால் கடைசியாக ஹிட் கொடுத்தது ‘இரும்புத்திரை’ படத்தில் தான். அதன் பின் வெளியான படங்கள் எதுவும் பெரியதாக வரவேற்பை பெறவில்லை, இந்த நிலையில் இவரின் 31வது படத்தின் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 

புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஹைதரபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். ஹைதரபாத் ஷூட்டிங்கில் நடிகர் விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.