ஷங்கரின் அடுத்த பட நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

31 ஜூலை 2021, 05:03 PM

கோலிவுட் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வசம் தற்போது  ராம்சரணின் 15வது படம், அந்நியன் ஹிந்தி ரீமேக் ஆகிய படங்கள் உள்ளன. 

இதில்  ராம் சரணின் 15வது படம் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, மேலும் பிரபல சௌத் கொரியன் நாயகி பே சுசி இதில் ஒப்பந்தமாகியுள்ளார், இவரை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அந்த தகவலை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

 கியாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கியாரா ஏற்கனவே மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் எண்ட்ரியாகிவிட்டதால் இந்த படம் அவருக்கான ரசிகர் படையை அங்கு உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடம். அதனால் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாயகியாக நடிகை கியாரா அத்வானி ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவை இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் 2022 துவக்கத்திலிருந்து நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.