அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஆயத்தமாகும் பிரஷாந்தின் ‘அந்தகன்’...

31 ஜூலை 2021, 05:01 PM

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான படம் தான் ‘அந்தாதூன்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ எனும்  தலைப்பில் உருவாகி வருகிறது.  

இந்தியில் ஆயுஷ்மான் நடித்த கேரக்டரில், தமிழில் பிரசாந்த் நடிக்கிறார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் படத்தை இயக்கி, தயாரிக்கிறார். பிரஷாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த இந்த படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

அடுத்தகட்டமாக பின்னணி வேலைகளை முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2002ல் வெளியான தமிழ் படத்திற்கு பிறகு 19 வருடங்கள் கழித்து பிரஷாந்த் - சிம்ரன் ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படம் பிரஷாந்த்க்கு பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.