விரைவில் ரஷ்யா செல்லவிருக்கும் ‘பீஸ்ட்’ படக்குழு...

31 ஜூலை 2021, 05:00 PM

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து தனது 65வது படத்திற்காக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரோடு கூட்டணி அமைத்தார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு திங்கள் கிழமை முதல் துவங்கவுள்ளது. 

இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.