அடுத்தடுத்து இணையத்தில் லீக்காகும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள்...

31 ஜூலை 2021, 04:59 PM

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகி வருகிறது.

 விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தாய்லந்தில் துவங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

 அதனை தொடர்ந்து கிடைத்த நேரங்களில் எல்லாம் இந்த கதையை ஆங்காங்கே படமாக்கிய மணிரத்திரம் தற்போது 70 சதவீதம் படத்தை முடித்துவிட்டார். இன்னும் 50 நாள் ஷூட்டிங் மீதமிருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட  படப்பிடிப்பிற்காக இவர்கள் பாண்டிச்சேரி சென்றுள்ளனர். 

இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த கதையின் முக்கியமான காட்சிகள் இந்த பாண்டிச்சேரி ஷெட்யூலில் தான் படமாகிறது. நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்காகி சமூக வலைதளங்களில் பரவியது. தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு குறித்த புகைப்படம் ஒன்றை நடிகை சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் போன்று உள்ளவர்களை குறிப்பிட்டுள்ள சுஹாசினி, ‘அவர்கள் ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் அல்ல என்றும் கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.