‘பிசாசு 2’ ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

30 ஜூலை 2021, 12:43 PM

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்திற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துவருகிறார். மிஷ்கினின் பேவரட் நாயகி பூர்ணா மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார். 

2016ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெகுவாக ரசிகர்களை ஈர்த்த படம் தான் ‘பிசாசு’. பேய்களை குறுரமாக காட்டும் பல படங்களுக்கு மத்தியில் பேயை தேவதையாக காட்டிருந்தார் மிஷ்கின்.

 இந்த மாறுதலே ரசிகர்களை கவர்ந்திருந்தது, இதன் இரண்டாம் பாகமாக உறுவாகிவரும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் ரசிகர்களின் சர்ப்ரைஸ்க்காக விஜய் சேதுபதி ஒரு வித்யாசமான ரோலில் தோன்றவிருக்கிறார். கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் மிஷ்கின். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.