சிவகார்த்திகேயன் படத்திற்கு இப்படி ஒரு நிலையா..? வியப்பில் ரசிகர்கள்...!

30 ஜூலை 2021, 12:42 PM

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் ‘டாக்டர்’. அனிரூத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கானதை தொடர்ந்து படத்தை வெளியிட காத்திருந்த படக்குழுவிற்கு கொரோனா இரண்டாம் அலை சிக்கலாக அமைந்தது. இதனால் படத்தின் தியேட்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

இதனிடையே படம் டிஜிட்டலில் வெளியாகவிருப்பதாக பரவலாக பேசப்பட்டது, ஆனால் டாக்டர் படம் தியேட்டரில் தான் நேரடியாக வெளியாகும் என படக்குழு தெளிவாக விளக்கம் கொடுத்தது, ஆனால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் எப்போது என்பது குறித்து பேசவே இல்லை. 

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தை தியேட்டரும் இல்லாமல் ஓடிடியும் இல்லாமல் நேரடியாக டிவி-யில் வெளியிட போவதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் உலாவ துவங்கியுள்ளது. வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக டாக்டர் படம் சன் டிவியில் ஒளிப்பரப்ப இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.