சிவகுமாரின் சபதம்’ முன்றாவது பாடலும் வெளியானது...

30 ஜூலை 2021, 12:00 PM

இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளராக இருந்து, ஆம்பள படத்தின் மூலமாக சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி தொடர்ந்து நல்ல நல்ல ஹிட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளரானார்.

https://www.youtube.com/watch?v=tYfo3aSLqHs

 மேலும் ‘மீசையை முறுக்கு’ படம் மூலமா நடிகராவும், இயக்குனராகவும் கலமிரங்கிய அவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுக்கவே அடுத்து வந்த நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களும் ஹிட்டாகிருந்தது, தற்போது இவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரு படங்களையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இதில் சிவகுமாரின் சபதம் படத்தை இயக்கி நடித்துள்ளார் ஆதி.  இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘சிவகுமார் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ட்ரெண்டான நிலையில் மூன்றாவது பாடலாக ‘நெருப்பா இருப்பான்’ எனும் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.