ஆகஸ்ட் மாத ரிலீஸை உறுதிப்படுத்திய ‘நெற்றிக்கண்’ படக்குழு...

30 ஜூலை 2021, 11:49 AM

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நாயகியாகவும் லேட் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. உச்ச நடிகர்களின் படங்களிலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வரும் இவர் கைவசம் ‘நெற்றிக்கண்’, ‘காதலும் கடந்து போகும்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் இவர் சோலோ நாயகியாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த ஏரளமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வந்தது. 

ஓடிடியில் படம் வெளியாகும் என பரவலாக பேசப்பட்ட நிலையில் அந்த தகவலும் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. நெற்றிக்கண் படத்தை நல்ல விலைக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டு ரிலீஸையும் உறுதிப்படுத்தியுள்ளது ஹாட் ஸ்டார் தளம். வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இயக்குனர் மிலன் ராவ் இயக்கத்தில் வெளியான ‘அவள்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் நிறைய த்ரில்லர் நிறைந்து இருக்கும் என்பதை படத்தின் ட்ரைலர் மூலம் மிலன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.