விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டுள்ளாரே உங்களின் கருத்து என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

07 ஏப்ரல் 2021, 12:57 PM

தமிழகம் நேற்று ஒரு முக்கிய விஷயத்திற்காக ஒன்று கூடியது. எல்லோரும் தங்களது ஜனநாயக கடமையை செய்தனர், கொரோனா பாதித்தவர்கள் கூட ஓட்டு போட்டனர்.

சினிமா பிரபலங்கள் யாரெல்லாம் வருகிறார்கள் என ரசிகர்கள் அதிகம் கவனித்து வந்தார்கள். அதற்கேற்ப நேற்று எல்லா பிரபலங்களுமே ஓட்டுபோட வந்தனர்.

அஜித் ஓட்டுபோட வந்தபோது நடந்த விஷயம் மற்றும் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது என நேற்று சமூக வலைத்தளமே இவர்களை பற்றிய பேச்சாக இருந்தது. இதற்கு நடுவில் நடிகர் விஜய் சேதுபதியும் ஓட்டுபோட வந்துள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எல்லாம் எடுத்தனர். அவரும் ரசிகர்களுடன் புகைப்படம் எல்லாம் எடுத்தார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியிடம் சில பத்திரிக்கையாளர்கள், ஓட்டுபோடும் மைதானம் எப்படி பாதுகாப்பாக உள்ளதா என கேட்டுள்ளனர், அதற்கு சூப்பர் என்றிருக்கிறார். விஜய் அவர்கள் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டுள்ளாரே அதுகுறித்து சொல்லுங்கள் என கேட்க, விஜய் சேதுபதி இதெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள், அதை அவரிடமே கேளுங்கள் என பதில் கூறியுள்ளார்.