இன்றும் ரசிகர்களுக்கு தளபதி தரிசனம்- எங்கே சென்றுள்ளார் பாருங்க, சூப்பர் க்ளிக்

07 ஏப்ரல் 2021, 12:55 PM

இளைய தளபதி விஜய் நேற்று அவரது வீட்டில் இருந்து ஓட்டுபோடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து செம மாஸ் காட்டினார். இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே, தரமான சம்பவம் என விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரது ரசிகர்களும், பிரபலங்களும் கமெண்ட் செய்து வந்தனர்.

தற்போது இன்றும் விஜய்யின் சூப்பர் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் அவர்கள் வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அவரது ரசிகர்கள் இன்றும் தளபதி தரிசனம் சூப்பர் என்கின்றனர்.

விஜய் தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்ல இருக்கிறார். அங்கு அடுத்த வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடந்தது, அந்த புகைப்படங்களும் செம வைரலாகின.