ஷிவானியை அடுத்து மாலத்தீவு சென்ற மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை!

31 மார்ச் 2021, 12:03 PM

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தாயாருடன் மாலத்தீவு சென்றார் என்பது தெரிந்ததே. அங்கிருந்து கொண்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தனது மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஷிவானி சென்னை திரும்பியுள்ள நிலையில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் மாலத்தீவு சென்றுள்ளார்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி அய்யர் தற்போது மாலை தீவு சென்றுள்ளார் என்பதும், அவர் தற்போது மாலத்தீவில் இருந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் இருமுகன் படத்தில் இடம்பெற்ற ’ஹெலனா’ என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது