கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரு ரெஸ்ஸல் ஸ்டையில் அட்லி… இணையத்தில் பரவிய போட்டோ!

30 மார்ச் 2021, 10:45 AM

இயக்குனர் அட்லி தனது புதிய சிகையலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் போல ஸ்டைலிஷான ஸ்பைக் சிகை அலங்காரத்தோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.