யானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்!

03 மார்ச் 2021, 02:55 PM

ராணா டகுபதி, விஷ்னு விஷால் நடிப்பில் காடன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் முதன்முறையாக ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் இயக்கும் திரைப்படம் காடன். தமிழில் காடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்தியில் “ஹாத்தி மெரெ சாத்தி” தெலுங்கில் “ஆரண்யா” என்ற பெயர்களில் வெளியாகிறது.

மூன்று மொழிகளிலும் ராணா டகுபதி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு வெர்சன்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இந்த படம் மூன்று மொழிகளிலும் மார்ச் 26 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.