என் குடும்ப பிரச்சனையை தீர்த்து வாழ்க்கை கொடுத்தவர் தனுஷ்: ரோபோ ஷங்கர்

23 பிப்ரவரி 2021, 02:06 PM

தன் குடும்ப பிரச்சனை ஒன்றை தீர்த்து வைத்து மிகப் பெரிய உதவி செய்திருக்கிறார் தனுஷ் என ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். தனுஷ் தனக்கு வாழ்க்கை கொடுத்துள்ளதாக பெருமையாக பேசியிருக்கிறார் ரோபோ ஷங்கர்.

மிமிக்ரி கலைஞரான ரோபோ ஷங்கர் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். படங்கள் தவிர்த்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். வெப் தொடரிலும் கவனம் செலுத்துகிறார்.

அவரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கித்தில் விஜய் நடித்த பிகில் படம் மூலம் நடிகையானார். பாண்டியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்திரஜா. முதல் படத்திலேயே தன் அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவக திறப்பு விழாவில் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர் தனுஷ் பற்றி பெருமையாக பேசினார்.

தனுஷ் பற்றி ரோபோ ஷங்கர் கூறியதாவது,

தனுஷ் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை, வாழ்க்கையே கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் தனுஷ் தான். கொரோனா நேரத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார்.

 ஒரு பர்சனல் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் தனுஷுக்கு போன் செய்து பேசினேன். அப்பொழுது அவர் டெல்லிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ஊருக்கு செல்லும் நேரத்தில் அவரிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என்று யோசித்து, தயங்கித் தயங்கி தான் கேட்டேன்.

எனக்கு குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் தனுஷ். நான் என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட ஆரம்ப புள்ளியை பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியது தனுஷ் தான் என்றார். கெரியரை பொறுத்த வரை தனுஷின் ஜகமே தந்திரம் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. தன் படம் ஓடிடியில் வெளியாவது தனுஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் டீஸரை வேற்று வெளியிட்டனர். ஆனால் தனுஷ் அந்த டீஸரை ட்வீட் செய்யவில்லை.

சரிடா பொத்திக்கிட்டு போடா என்று டீஸரில் தனுஷ் சொல்லியிருந்தார். அவர் ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்தை தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டனர்.