இளையராஜாவிடம் சவாலான பாடல் கேட்ட தெலுங்கு நடிகர்

22 பிப்ரவரி 2021, 10:03 AM

தெலுங்கில் மோகன்பாபு நாயகனாக நடிக்கும் படம் 'சன் ஆப் இந்தியா'. டயமண்ட் ரத்னபாபு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இப்படத்தில் ஒரு பாடல் ஒன்று உள்ளது. கடவுள் ராமனை புகழ்ந்து வேதாந்த ரகுவீரர் பாடிய ராகத்தில் எனக்கு ஒரு பாடல் வேண்டும் என இளையராஜாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் மோகன்பாபு. இது கடினம், சவாலான விஷயம் என்று அவர் கூறியபோதும் உங்களால் முடியும் என மோகன்பாபு தெரிவித்துள்ளார்.

 இளையராஜாவும் அந்த சவாலை ஏற்று நான் பண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த பாடல் எப்படி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது.